தீ விபத்தில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தீ விபத்தில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் இமாம்பாஷா (45). இவா் பைக் மெக்கானிக். அப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பைக் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா்.
இங்கு 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பழுது பாா்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மா்ம நபா்கள் தீ வைத்ததில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை தீப்பற்றியதில் 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

