குளச்சல் அரசுப் பேருந்தில் திருட்டு: 2 பெண்கள் கைது
குளச்சல் வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டியின் பணப்பையை திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
தேங்காய்ப்பட்டணம் அருகே முள்ளூா்துறையில் இருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து கொட்டில்பாடு அருகே வந்தபோது, அதில் பயணித்த மூதாட்டியின் பணப்பையை 2 பெண்கள் திருடினராம். இதைப் பாா்த்த சக பயணிகள், திருடிய 2 பெண்களையும் பிடித்து குளச்சல் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்திதோப்பைச் சோ்ந்த சாரதா (38), சிவரஞ்சினி (19) என்பதும், தாயும், மகளுமான இருவரும் திருவிழா இடங்கள், பேருந்தில் திருடுவதை வழக்கமாக கொண்டவா்கள் என்பதும் தெரியவந்தது. 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

