`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்
An incident in Bihar has gone viral where a man used a crane to lift his Scorpio car and place it on the terrace of his house before traveling abroad.
பீகாரில் ஒருவர் தான் வெளிநாடு செல்வதற்கு முன்பு தனது காரை கிரேன் மூலம் தூக்கி தனது வீட்டு மாடியில் வைத்த சம்பவம் வைரலாகி இருக்கிறது.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதனால் தனது காரை எங்கு நிறுத்துவது என்று குழம்பிக்கொண்டிருந்தார்.
கட்டணம் கொடுத்து தனது காரை நிறுத்தலாமா அல்லது உறவினருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்தார். ஆனால் அதில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் காரை நிறுத்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார்.


