திருப்போரூர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
திருப்போரூர், செப். 9– திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முருகருக்கு உகந்த நாளான நேற்று, செவ்வாய்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முருகருக்கு உகந்த நாளான நேற்று, செவ்வாய் தரிசனமும் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடும் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
