கோவை–மதுரை ரயிலை போடிக்கு நீட்டிக்க கோரிக்கை
தேனி, செப்.7– கோவை–மதுரை இன்டர்சிட்டி விரைவு ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் என தேனி மாவட்ட ரயில்
கோவை–மதுரை இன்டர்சிட்டி விரைவு ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் என தேனி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடியில் இருந்து மதுரைக்கு தினசரி மாலையில் பாசஞ்சர், இரவில் 6 நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. காலையில் மதுரைக்கு ரயில் இல்லை. மதுரை, கோவைக்கு காலையில் செல்வோர் பயன்பெறும் வகையில் ரயில் இயக்க கோவை–மதுரை இன்டர்சிட்டி ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் என தேனி மாவட்ட ரயில் பயணிகள், சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். பயணிகள் கூறுகையில், கோவை ரயிலை போடிக்கு நீட்டிப்பதன் மூலம் வேளாண் விளை பொருட்களை எடுத்து செல்ல விவசாயிகளுக்கு எளிதாக இருக்கும். மேலும் படிப்பு, மருத்துவம், சுற்றுலா, ஆன்மீக பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு காலை நேர ரயில் கிடைக்கும். கோவை– மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

