9 மாதங்களில் 2,873 மனுக்களுக்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அனுமதி
சென்னை மாநகராட்சியில் கடந்த 9 மாதங்களில் வீடு கட்ட விண்ணப்பித்தவா்களில் 2,873 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என நகரமைப்பு திட்டப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தரைத்தளம் மற்றும் 3 மேல் தளங்களுடன் 5,000 சதுர அடியில் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அந்தந்த மண்டலங்களிலும், 5,000 சதுர அடி முதல் 10,000 சதுர அடி வரை ரிப்பன் கட்டட தலைமை அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு திட்டப் பிரிவிலும் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சதுர அடிக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தைக் கட்டி இணையத்திலும் விண்ணப்பித்து வீடுகளுக்கு அனுமதி பெறலாம்.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை கட்டடங்கள் கட்டுவதற்கு 4,752 போ் விண்ணப்பித்துள்ளனா். அதிகபட்சமாக 7-ஆவது மண்டலமான அம்பத்தூா் பகுதியில் 275 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவுத் தலைமை அலுவலகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 1,059 போ் மனு அளித்துள்ளனா்.
