இந்திய எல்லையில் படைகளை குறைத்த சீனா: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி,லடாக் மோதல்கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இந்திய ராணுவம் அவர்களை தடு
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இந்திய ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.
உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோதலை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கு கூடுதல் படைகளை குவித்தன. இதனால் பல மாதங்களாக அங்கே பதற்றமும், பரபரப்பும் நீடித்தது. அத்துடன் இருநாட்டு உறவுகளும் சீர்குலைந்தது.
எனவே இந்த பதற்றத்தை தணித்து எல்லையில் அமைதியை நிரந்தரமாக்கும் நோக்கில் இரு தரப்பினரும் அடுத்தடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், அடுத்தடுத்து சந்திப்புகள் நிகழ்ந்தன. அத்துடன் எல்லை மோதல்களை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகளும் அவ்வப்போது சந்தித்து பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அங்கே படைகளை திரும்பப்பெறவும் வலியுறுத்தினர்.

