பதவி உயர்வு பெற்றும் 28 அதிகாரிகள் பரிதவிப்பு உள்ளதும் போச்சு! வேலையிலும் சேர முடியலை; சம்பளமும் ரத்தாச்சு:மாநகரில் மழை முன்னெச்சரிக்கை பணி தொய்வு
- நமது நிருபர் - சென்னை மாநகராட்சியில் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற, 100 செயற்பொறியாளர்களில், 28 பேர் வேலையில் சேர
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற, 100 செயற்பொறியாளர்களில், 28 பேர் வேலையில் சேர முடியாமலும், பழைய பணியிடத்திற்கும் திரும்ப முடியாமலும் பரிதவித்து வருகின்றனர். பதவி உயர்வுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றதால், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் உதவி செயற்பொறியாளர் இல்லாததால், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிந்த, 116 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்களாக, ஆக., 4ல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களில், 100 பேர் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்கள்; 16 பேர் இதர மாநகராட்சி, நகராட்சிகளை சேர்ந்தவர்கள்.
