விருதை - ராமநத்தம் 4 வழி சாலை பணிகள்... ஜரூர்!:விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
திட்டக்குடி, செப். 17- விருத்தாசலம் - ராமநத்தம் நான்கு வழி சாலை பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இப்பணிகளை
விருத்தாசலம் - ராமநத்தம் நான்கு வழி சாலை பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் விருத்தாசலம் - ராமநத்தம் பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியே திருச்சி, கடலுார், சென்னை, மதுரை, கோயம்புத்துார், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏராளமான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் குறுகிய பாலங்கள், வளைவு சாலைகளால், விருத்தாசலம் - ராமநத்தம் வரையிலான 42 கி.மீ., துாரத்தை கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலானது.
திருச்சி - கடலுார், திட்டக்குடி - சென்னை, திட்டக்குடி - சிதம்பரம் பகுதிகளுக்கான பயண நேரம் அதிகமானதோடு, வாகன விபத்துகளும் அதிகரித்து வந்தன. இச்சாலையில் சந்திக்கும் கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.




