ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரவில்லை.. கணக்கில் பிடித்தம்.. வாடிக்கையாளருக்கு ரூ.59 ஆயிரம் இழப்பீடு..
புது டெல்லி, புதுடெல்லி அருகே காசியாபாத்தில் ஏ.டி.ஏம். எந்திரத்தில் பணம் வராத போதும், கணக்கில் பணம் பிடித்தம் செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு ரூ.59 ஆயிரத்து 600
புதுடெல்லி அருகே காசியாபாத்தில் ஏ.டி.ஏம். எந்திரத்தில் பணம் வராத போதும், கணக்கில் பணம் பிடித்தம் செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு ரூ.59 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி அருகே காசியாபாத்தில் ஏ.டி.ஏம். எந்திரத்தில் பணம் வராத நிலையிலும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்ட வழக்கில், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மொத்தம் ரூ.59 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று காசியாபாத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம், மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றபோது, அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் பற்று வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணம் வெளியே வரவில்லை. இதுகுறித்து அவர் தனது கணக்கு வைத்துள்ள பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் புகார் அளித்தார்.


