இரண்டே நாளில் ஏ.ஐ. கற்பிக்க முடியுமா?
கோவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொடுக்க டி.என். ஸ்பார்க் திட்டம் அறிமுகமானது.
கோடிங், ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கற்றுத்தர மாவட்ட, வட்டார அளவில் கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தேவையற்ற வீண் வேலை என்கிறது தமிழக பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம். கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி பற்றி இரண்டே நாளில் புரிய வைப்பது சாத்தியமா? என்று கேட்கிறார் அதன் பொதுச்செயலாளர் குமரேசன்.

