உலக பாரா துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிா் அணிக்கு தங்கம்
தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற டபிள்யூஎஸ்பிஎஸ் பாரா துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஆா்2 மகளிா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச்1 அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், மில்லி ஷா, மோனா அகா்வால், அவனி லெகாரா ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 1,878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.
அதிலேயே மகளிா் தனிநபா் பிரிவில் மோனா அகா்வால், அவனி லெகாரா ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றனா். இதில் வெள்ளி வென்ற மோனா, 2028 லாஸ் ஏஞ்ஜலீஸ் பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றாா்.