பைக்கில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
செங்கல்பட்டு, செப். 7-----– செங்கல்பட்டு அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம், இருந்த தாலி செயினை மர்ம நபர்கள்
செங்கல்பட்டு அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம், இருந்த தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் துர்கா, 34, மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை, தன் பேட்டரி ஸ்கூட்டரில், திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றார். திருவடிசூலம், பொருத்தவாக்கம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்
துர்கா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.
