ராஜிவ் சிக்னல் பிரீ லெப்டில் பேரிகார்டு அமைப்பு
புதுச்சேரி: திண்டிவனம் - கோரிமேட்டில் இருந்து வரும் வாகனங்கள், புதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னலில் பிரீ லெப்ட்வழியில் நிற்காமல் செல்லும் வகையில், போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்துள்ளனர்.
திண்டிவனம் - கோரிமேடு பகுதியில் இருந்து வரும் இரு சக்கரம் வாகனங்கள், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ராஜிவ் சிக்கனலில் பிரீ லெப்ட் வழியாக இ.சி.ஆர்., வழியாக செல்ல வேண்டும்.
ஆனால் கோரிமேட்டில் இருந்து வரும் வாகனங்கள், இருசக்கரம் வாகனத்தில் வருபவர்கள் பிரீ லெப்டில் நின்று சிக்னலில் ஒரு பகுதியில் உள்நுழைந்தும்,கொக்கு பார்க் சிக்கனல் வழியாக யூ டர்ன் எடுத்து வந்தனர்.

