ஏரி நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரும் பணி தொடக்கம்
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், ஏரி நீர்வரத்து கால்வாய்கள் துார்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 97 ஏரிகள் உள்ளன. பருவமழை காலத்தில், மழைநீர் ஏரிகளை அடைய, நீர்வரத்துக் கால்வாய்கள், உபரிநீர் வெளியேறும் கால்வாய்கள், பாசன கால்வாய்கள் ஆகியவை உள்ளன.
கால்வாய்கள் துார்ந்தும், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், கால்வாய்களை துார்வாரி பராமரிக்க, பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கியது.

