வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்: அசத்திய வேலூர் இளைஞர்கள்
சென்னை, வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதி இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளி வாக்குச்சாவடி வடிவில் விழிப்புணர்வு பந்தல் அமைத்து பொதுமக
வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதி இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசுப் பள்ளி வாக்குச்சாவடி வடிவில் விழிப்புணர்வு பந்தல் அமைத்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விதவிதமான கருப்பொருள்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு காவல் நிலையம் வடிவில் வடிவமைத்திருந்தனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஒரு படி மேலே சென்ற சில பகுதி இளைஞர்கள், ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்த முடிவு செய்தனர். நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பந்தலை அவர்கள் அமைத்துள்ளனர்.


