தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த கோரிக்கை
ச ட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: மார்க்சிஸ்ட் கம்யூ., - லதா: தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள,
மார்க்சிஸ்ட் கம்யூ., - லதா: தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தற்போது வழங்கப்பட்டு வரும் மூன்று கோடி ரூபாய் போதுமானதாக இல்லை. இதை ஐந்து கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி., வரி விலக்கு என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
பா.ம.க., - சவுமியா: மின் துறையில் ஊழலை ஒழித்தால் மின் கட்டணமும், கல்வித் துறையில் ஊழலை ஒழித்தால், கல்விக் கட்டணமும் குறைய வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியை ஐந்து கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.