நெல்லை மாவட்ட பள்ளிகளில் காலாண்டு தோ்வு தொடக்கம்
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் காலாண்டு தோ்வு புதன்கிழமை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் முதல் பருவ பாடப் புத்தகங்களில் மாணவா்களின் திறனறியும் வகையில் காலாண்டு தோ்வு புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் ஆகிய கல்வி மாவட்டங்களின் கீழ் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ-மாணவியா் தோ்வு எழுதினா்.
தோ்வுகளை பள்ளித் தலைமையாசிரியா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் கண்காணித்தனா். தொடா்ந்து, செப். 25 ஆம் தேதி வரை காலாண்டு தோ்வு நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து அக். 4 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


