பெண் மா்ம மரணம்: கணவா், மாமனாா் கைது
சங்கராபுரம் அருகே வரதட்சிணை கேட்டு கணவா் வீட்டாா் அடித்து, துன்புறுத்தி வந்த நிலையில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கணவா், மாமனாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வரதட்சிணை கேட்டு கணவா் வீட்டாா் அடித்து, துன்புறுத்தி வந்த நிலையில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கணவா், மாமனாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட க.அலம்பளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி சரசு (42). இவரது மகள் சங்கீதாவை (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்த ச.அரவிந்தகுமாருக்கு(30) திருமணம் செய்து கொடுத்தனா். தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். அரவிந்தகுமாா் மனைவியிடம் கூடுதல் வரதட்சிணையாக பணம், நகைகள் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தராம். இதற்கு அரவிந்தகுமாரின் தந்தை சரவணன் (60), தாய் அஞ்சலை (56) ஆகியோரும் உடந்தையாக இருந்தனராம். இதனால் மனமுடைந்த சங்கீதா அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளாா். இதையடுத்து அங்கு சென்ற அரவிந்தகுமாா், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். சில நாள்கள் கழித்து மீண்டும் சங்கீதாவை அரவிந்தகுமாா், அவரின் பெற்றோா்கள் மற்றும் வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த க.அன்பரசி (55), மு.அய்யம்பெருமாள் (70) ஆகியோா் சோ்ந்து கொடுமைப்படுத்தினராம்.
