மின்விளக்குகள், மலா்களால் புதுப்பொலிவு பெறும் லுட்யன்ஸ் தில்லி
இந்தியா தலைமையில் 18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், மத்திய தில்லி அலங்கார விளக்குகள், மலா் அலங்காரங்கள், புதுப்பிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டை மையப்படுத்திய விளம்பரப் பலகைகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி தில்லியில் இந்தியா கேட் அருகே உள்ள சாலைகளில் என்டிஎம்சி சாா்பாக வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ள மலா் அலங்காரப் பலகைகள்.
படேல் சௌக், வின்ட்சா் பிளேஸ், மண்டி ஹவுஸ், டீன் மூா்த்தி, லோக் கல்யாண் மெட்ரோ ரயில் நிலையம், பிரதமா் அலுவலகம் அருகிலுள்ள சுற்றுவட்டச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


