இன்னைக்கு சுதாரிச்சிட்டாங்க!
தமிழக சட்டசபையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்து வருகிறது.
காங்கிரசைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலுரை அளித்தபோது, ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு புகழாரம் சூட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின், 'வருங்கால பிரதமர்...' என அவர் கூறியதும், அமைச்சர்கள் மற்றும் த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆரவாரமாக மேஜையை தட்டி வரவேற்றனர்.
அதன்பின் ராஜேஷ்குமார், 'வருங்கால பிரதமர் ராகுல்' என்றதும், ஒருவருக்கொருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

