1,53,000 டன் சிமெண்ட்; விநியோக டெண்டர்; வருவாயை விட மனிதாபிமானம் முக்கியம்
எந்த ஓர் அணையிலும் அதிக கொள்ளளவு நீரை சேமிக்க அணை பராமரிப்பு மற்றும் நீர் நிலைகளை தூர் வாரி நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டியது பொதுப்பணித் துறையின் முக்கியக் கடமைகளில் ஒன்று. பழங்காலந்தொட்டே இந்த தூர்வாருவது குறித்த நடைமுறைகள் காலத்துக்கேற்றவாறு மாறுதலும் அடைந்துள்ளது.
ஓயாமல் நடந்த பெரும் விவாதங்களுக்குப் பிறகு மேட்டூரில் அணை கட்ட, சிமெண்ட் பயன்படுத்துவது என்ற முடிவெடுக்கப்பட்டு அதை விநியோகிக்க டெண்டர் கோரப்பட்டது. இதன் அடிப்படையில், உறுப்பினர் ஏ. ரங்கநாத முதலியார் சில கேள்விகளை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த அரசாங்கம், “ஷஹாபாத் சிமெண்ட் நிறுவனம்” 1,53,000 டன் சிமெண்டை டன் ஒன்றுக்கு ரூ.31.70. ஷஹாபாத் விலையில் வழங்கும். ரயில் கட்டணம் உட்பட, அரசாங்கத்திற்கு ஏற்படும் மொத்த செலவு சுமார் ரூ. 82,62,000 என்று அரசு அவையில் தெரிவித்தது.


