மஞ்சள் பைவிழிப்புணர்வு
மதுரை: மதுரை வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) தென்கரை முத்துப்பிள்ளை தலைமை வகித்தார். மதுரை டி.இ.ஓ., செந்தில்குமார் காலநிலை மாற்றம் குறித்து சிறப்புரையாற்றினார். தனக்கன்குளம் தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். அனைத்து மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் இந்துமதி, விஜயசாரதி, மாரிமுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
