லட்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 9 போ் கைது
லட்சத்தீவு அருகே கவரட்டி தீவில், தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விசைப்படகுடன் கவரட்டி தீவு காவல் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருவைகுளத்தைச் சோ்ந்த நட்டாா் என்ற மிக்கேல்ராஜுக்குச் சொந்தமான செவுள்வலை விசைப்படகில், அவா் உள்பட 9 போ் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துள்ளனா்.
பின்னா் அந்த மீனை கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததாகவும், பின்னா் கடந்த 4ஆம் தேதி கொச்சியில் இருந்து மீண்டும் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனா்.



