மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்
மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கேவிற்கு ரூ.1000 கோடி மோசடியில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோஜ் ஜராங்கே மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனோஜ் ஜராங்கே மற்றும் அவரது கூட்டாளிகள் சிலருக்கு எதிரான ஊழல் புகாரை சமூக ஆர்வலர் அஜய் பரஸ்கர் அமலாக்கத் துறையிடம் அளித்துள்ளார்.


