லாரி மோதி 50 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு - பரமக்குடி அருகே பரிதாபம்
ராமநாதபுரம்,பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது லாரி மோதியதில், அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர
பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது லாரி மோதியதில், அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவனுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை, அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு கருவேல மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் 50 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.


