1.76 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
திருநெல்வேலி அருகே வெவ்வேறு சம்பவங்களில் காா்களில் கடத்தி வரப்பட்ட சுமாா் 1.76 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், மாநகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, உடையாா்பட்டி விலக்கு அருகே சந்தேகமளிக்கும் வகையில், வண்ணாா்பேட்டை சாலைத் தெருவைச் சோ்ந்த காசி விஸ்வநாதன் மகன் முருகன் (30) ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 20 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை சனிக்கிழமை கைது செய்தனா்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

