லோடு வேன் உரிமையாளர் பலி
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் குமார் 36, இவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கீழ பொட்டல்பட்டி நான்கு வழி சாலை மேம்பாலம் அருகே தனது வேனின் பழுதான டயரை மாற்றுவதற்காக ஜாக்கி ஏற்றும் போது மயக்கமடைந்து பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வத்திராயிருப்பு ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் குமார் 22, ஆட்டோ உரிமையாளர். இவர் நேற்று முன் தினம் இரவு மகாராஜபுரத்தில் பயணிகளை இறக்கி விட்டு வத்திராயிருப்பு திரும்பும்போது ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
