வங்கி அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்
கோவை: கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கடன்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கி, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான தொழில் கடன்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில் மையம், நபார்டு, ஆர்.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
