ராமநாதபுரம் ரோட்டில் ஆறாக பாயுது தண்ணீர்
கோவை: மாநகரில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகத்துக்கான பைப் பதிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இறுதிகட்ட வேலை நடக்கிறது. இந்த வேலையின்போது ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு சேதமடைகிறது.
ராமநாதபுரம் பங்கஜா மில் ரோடு சந்திப்பில், குழாய் உடைந்து ஒரு வாரமாக தண்ணீர் ரோட்டில் பாய்கிறது.
அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் விநியோக அளவு குறைந்துள்ளது. மக்கள் இதனால் அவதிப்படும் நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு வாரமாக தண்ணீர் வீணாகிறது.

