கன்னாட் பிளேஸைச் சுற்றி மாலை 6.30க்கு அப்பால் விற்பனைக்கு தடை விதித்த என்டிஎம்சி
புது தில்லி முனிசிபல் கவுன்சில் விற்பனை செய்யாத மண்டலங்களில் தொடா்ச்சியான ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் மாலை 6.30 மணிக்கு மேல் விற்பனை செய்வது உட்பட அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என். டி. எம். சி) விற்பனை செய்யாத மண்டலங்களில் தொடா்ச்சியான ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் மாலை 6.30 மணிக்கு மேல் விற்பனை செய்வது உட்பட அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கன்னாட் பிளேஸ், ஜன்பாத், பாலிகா பஜாா், ரீகல், ரேவோலி, ஹனுமான் மந்திா் மற்றும் குருத்வாரா பங்களா சாஹிப் ஆகியவற்றைச் சுற்றி சிறப்பு கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் பராமரிக்கப்படும். செப்டம்பா் 14 ஆம் தேதி இணை இயக்குநா் (அமலாக்க-வடக்கு) மற்றும் பகுதி ஆய்வாளா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அதிக போக்குவரத்து பகுதிகளை நெரிசலான பகுதிகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டன.


