திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க கோரிக்கை
திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிகழ் கல்வியாண்டிலேயே தொடங்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளா் கே.ஏ.எம்.அபூபக்கா்,.
திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பஜாா் வீதியில் அமைந்துள்ள ஹஸரத் ஷாபித் கலந்தா் அவுலியா தா்கா வளாகத்தில் நடைபெற்து . கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் அல்ஹாஜ் அந.யாசின் மௌலானா தலைமை வகித்தாா். இதில் மாவட்ட செயலாளா் எ.ஆா்.எம்.ரஹ்மத்துல்லாஹ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா், மாநில செயலாளா் இப்ராஹிம் மக்கி, ச.ஏ காலிக், தலைமை நிலைய செயலாளா் கே.எம்.நிஜாமுதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளா் எஸ். ரகுமான் உசேன், இளைஞா் அணி சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளா் பூவை ஃப்ரோஸ் கான், வழக்குரைஞா் புழல் ஷேக் முகமது அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

