உடன்குடி அனல் மின் நிலையத்தில் அலகு 1-ல் 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை எட்டி சாதனை
தூத்துக்குடி,உடன்குடி அனல் மின்நிலையம்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் அனல் மின
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13 ஆயிரத்து 76 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 13.03.2026 அன்று உடன்குடி மிக உய்ய அனல் மின்நி லையம் (2x660 மெகாவாட்) அலகு 1-ல் கடந்த மார்ச் 13-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த அலகில் தின சரி சுமார் 300 முதல் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
உடன்குடி அனல் மின்நிலையத்தில் அலகு 1-ல் வணிக ரீதியான 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை விரைவில் கொண்டு வர முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன் டிப்படையில் உடன்குடி அனல் மின் நிலையம் அலகு 1-ல் வணிக ரீதியான முழு மின் உற்பத்தி அடைய பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து அலகு 1-ல் வணிக ரீதியான சோதனை உற்பத்திக்கான தொடர் முழு உற்பத்தி திறன் ஆய்வு சோதனை ஓட்டம் கடந்த 2-ந் தேதி மாலை 4.16 மணி முதல் 5-ந் தேதி (நேற்று) மாலை 4.15 வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு தொடர்ச்சியாக 72 மணி நேரம் முழு உற்பத்தியான 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.




