கல்லுாரியில் படிப்பு ஆலையில் பயிற்சி
திருப்பூர், செப்.6– படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, படிக்கும் காலத்திலேயே தொழில் அனுபவம்
படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, படிக்கும் காலத்திலேயே தொழில் அனுபவம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும் தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு, சங்கத்தின் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நல துணைக்குழு உறுப்பினர் கந்தசாமி, ‘யங் டீ’ துணைக்குழு உறுப்பினர் முகமது ஹாசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரிய இயக்குனர் விஜய் சங்கர் பாண்டே, உதவி இயக்குனர் பவுல் எட்வர்ட் ஆகியோர் கூறியதாவது:


