இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு
கோவை: தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் பாரதியார் நினைவு தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சியின் சிங்காநல்லுார் தொகுதி மாணவர் பாசறை சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பீளமேடு, எல்லைத் தோட்டம் சாலை அருகே இருவரது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், புலியகுளம், உப்பிலிபாளையம், பூசாரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் புதிய தமிழகம் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இமானுவேல் சேகரனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

