'நாட்டில் இருந்து வெளியே போங்க..' ஜெர்மனியில் வெடித்த புதிய சர்ச்சை.. அதிர்ச்சியில் 10 லட்சம் பேர்!
செய்தியாளர்: எம்.மீரா2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு மில்
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையே போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்களுக்கு ஜெர்மனி தற்காலிக பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உக்ரைனுக்கான ஜெர்மனியின் ஆதரவு குறித்து அந்நாட்டில் அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
ஜெர்மனியின் வலதுசாரி கட்சியான AfD-இன் இணைத் தலைவர் Alice Weidel, ’ஜெர்மனியில் வசிக்கும் உக்ரைனியர்கள், குறிப்பாக ராணுவ வயதில் உள்ள இளம் ஆண்கள், தங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஜெர்மனியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருவதாகவும், இந்தச் செலவு இனி நீடிக்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைனியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காரணம் முடிவுக்கு வந்தவுடன் அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றும் Weidel தெரிவித்துள்ளார். குறிப்பாக, ராணுவச் சேவைக்கு உட்பட்ட வயதில் இருக்கும் இளம் ஆண்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அவரது வாதமாக உள்ளது.

