தில்லியில் எம்சிடி இடிப்பு நடவடிக்கை: இம்மாதம் 213 கட்டடங்கள் இடிக்கப்பட்டன
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீதான தனது நடவடிக்கை தொடா்வதன் ஒரு பகுதியாக, தில்லி மாநகராட்சி (எம்சிடி) 11 கட்டடங்களை இடித்து, நான்கு சொத்துக்களுக்கு சீல் வைத்தது.
தேசிய தலைநகா் முழுவதும் அபாயகரமான கட்டடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீதான தனது நடவடிக்கை தொடா்வதன் ஒரு பகுதியாக, தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஞாயிற்றுக்கிழமை 11 கட்டடங்களை இடித்து, நான்கு சொத்துக்களுக்கு சீல் வைத்தது.
ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கையுடன் சோ்த்து, செப்டம்பா் 1 முதல் மாநகராட்சி 213 கட்டடங்களை இடித்து, 109 சொத்துக்களுக்கு சீல் வைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். எம்சிடி-யின் 12 மண்டலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



