போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல்
மும்பையில் பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்ட மாணவர்களிடம் ஆதார் கார்டு வாங்கி அவர்களது பெயரில் வங்கியில் கணக்கு திறந்து 15 நாட்களில் 11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
சைபர் மோசடி கும்பல் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் மோசடி மூலம் பெறும் பணத்தை வங்கிக் கணக்கில் பெற அப்பாவிகளின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.
அப்பாவி மக்களுக்குத் தெரியாமல் அவர்களது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தி மோசடி பணத்தை அந்த வங்கிக்கணக்கிற்கு வரவைத்து வேறு கணக்கிறகு உடனே மாற்றுகின்றனர்.

