நெல்லை: வெறிச்சோடிய உழவர் சந்தை... இரவில் மது அருந்தும் இடமாக மாறிய அவலம்!
பல ஆண்டுகளாக உழவர் சந்தையில் வியாபாரம் நடைபெறாததால், விவசாயிகளும் வியாபாரிகளும் வாரச்சந்தைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு மாறிவிட்டனர். சந்தைக்காக கட்டப்பட்ட கடைகளும் தற்போது பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கின்றன.
திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள கண்டியப்பேரி உழவர் சந்தை, ஒரு காலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்திய இடமாக இருந்தது. ஆனால் தற்போது வியாபாரம் முழுமையாக நின்று, சந்தை வளாகம் வெறிச்சோடி கிடக்கிறது. நேரில் பார்வையிட்டபோது, அப்பகுதியினர் பகிர்ந்த தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
அப்பகுதியினர் கூறுகையில், ``பல ஆண்டுகளாக உழவர் சந்தையில் வியாபாரம் நடைபெறாததால், விவசாயிகளும் வியாபாரிகளும் வாரச்சந்தைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு மாறிவிட்டனர். சந்தைக்காக கட்டப்பட்ட கடைகளும் தற்போது பயன்பாடின்றி சேதமடைந்து கிடக்கின்றன. மீண்டும் இங்கு வியாபாரம் தொடங்குவதற்கு விவசாயிகளிடமும் ஆர்வம் குறைந்துள்ளதாக" அவர்கள் தெரிவித்தனர்.

