திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!
இந்தப் பகுதி மக்கள் வேணுகோபால சுவாமியைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பக்தி செய்கிறார்கள். `குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துல' என்பது பழமொழி. அப்படித்தான் இங்கே அமர்ந்து அருள்பாலிக்கிறார் வேணுகோபால சுவாமி.
திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு.
அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில். திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது ஆலயம். இது குழந்தை வரமளிக்கும் தலமாகவும், குறை தீர்க்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது.


