18.9.1976: மொஸாம்பிக்கில் நிலக்கரிச் சுரங்க விபத்து: 140 பேர் சாவு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
மபுடோ (மொஸாம்பிக்) செப். 17- வடகிழக்கு மொஸாம்பிக்கில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் காலரி இடிந்து விழுந்த போது 140 சுரங்கத் தொழிலாளர்கள் மாண்டனர் என்று மொஸாம்பிக் ரேடியோ இன்று அறிவித்தது.
பெரும்பாலான சுரங்க தொழிலாளர்கள் சுரங்கத்துக்கு உள்ளே இருந்த போது விபத்து ஏற்பட்டது.
