லடாக்கில் அமைகிறது உயர் நீதிமன்ற கிளை
லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற கிளை விரைவில் அமையவுள்ளது. ஜம்மு -
யூனியன் பிரதேசமான லடாக்கில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற கிளை விரைவில் அமையவுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் இருந்து தனி யூனியன் பிரதேசமாக லடாக் உருவானது. அதன் வளர்ச்சி நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில், லடாக் மக்கள் நீதிக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற கிளையை அங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட விதிமுறை கடந்த, 5 முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இதற்கான அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் 27ல் ஒப்புதல் அளித்தார்.
இது குறித்து பேசிய லடாக் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ''தொலைதுார கிராமங்களில் வாழும் எளிய மக்களுக்கு எளிதாக நீதி கிடைக்கும் வகையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு அலைவதும், செலவு செய்வதும் குறையும்,'' என்றார்.


