நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் ... நிரந்தரமானது நெரிசல்!: பொதுமக்கள் போராட்டத்தால் பணிகள் நிறுத்தம்
உடுமலை: உடுமலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில், அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல், பாரபட்சம் காட்டியதால், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. உடுமலை நகரில் பிரதான ரோடுகளான, பழநி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, பைபாஸ் ரோடு, ராஜேந்திரா ரோடு, உழவர் சந்தை ரோடு, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, வ.உ.சி., வீதி, ராமசாமி நகர் ரோடு, கொழுமம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக காணப்படுகிறது.
அதோடு, வணிக நிறுவனங்கள், கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதோடு, அங்கு வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளதோடு, அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர்.




