போலீஸ் சோதனையில் 1,560 லாட்டரி பறிமுதல்
ஆனைமலை: ஆனைமலை அருகே, 1,560 கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
ஆனைமலை அருகே, திவான்சாபுதுாரை சேர்ந்தவர் மனோஜ்,25. இவர், மீனாட்சிபுரத்தில் லாட்டரி கடை நடத்துகிறார். தமிழக எல்லையில் உள்ள திவான்சாபுதுார் வீட்டில் வைத்து கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், எஸ்.ஐ., ஸ்டீபன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் மனோஜ் வீட்டில் சோதனை செய்தனர். அதில், விற்பனைக்காக வைத்து இருந்த, 1,560 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

