எல் - நினோ தாக்கத்தால் பாதிப்பு; நீலகிரியில் தேயிலை உற்பத்தி சரிவு
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து வறட்சி நீடிப்பதால், தேயிலை விளைச்சல் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில் துறையினர் தெரிவித்ததாவது:
வழக்கமாக தினமும் 4,000 முதல் 8,000 கிலோ வரை பச்சை தேயிலை பெறும் சில தொழிற்சாலைகளுக்கு, தற்போது 600 முதல் 800 கிலோ மட்டுமே கிடைக்கிறது. எல் - நினோ தாக்கத்துடன் தொடர்புடைய மழை குறைவு மற்றும் நீடித்த வறட்சியே இதற்கு முக்கிய காரணம். இதனால் சில தொழிற்சாலைகளின் வருவாய் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 5 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தி செய்த ஒரு தொழிற்சாலையில், இந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கம் வரை உற்பத்தி 4 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு நீடித்தால் தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படக்கூடும்.

