சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலைய திட்டம் தீர்வா? அச்சுறுத்தலா? தூத்துக்குடி அனல் மின்நிலையப் பின்னணி..!
உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், தூத்துக்குடியில் புதிதாக ‘சூப்பர் கிரிட்டிக்கல்’ அனல் மின்நிலையம் அமைக்கும் அறிவிப்பு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீர்வா அல்லது அச்சுறுத்தலா என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில், நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
'2070-க்குள் கார்பன் உமிழ்வு அற்ற நிலை' என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தூத்துக்குடியில் புதிதாக ‘சூப்பர் கிரிட்டிக்கல்’ அனல் மின்நிலையம் அமைக்கப்படும் அறிவிப்பு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


