தங்கை கர்ப்பம் அண்ணன் கைது
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 15 வயது தங்கையை கர்ப்பமாக்கிய, 18 வயது அண்ணன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த, 15 வயது இளம்பெண் பிளஸ் 1 படிக்கிறார். சகோதரர் முறையான, 18 வயது கல்லுாரி மாணவர், சில மாதங்களாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதில் அவர், மூன்று மாத கர்ப்பமானார். பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் இளம்பெண் புகாரில், அவரது அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று கைது செய்தனர்.
