சூளகிரி தொழில் பூங்கா சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, 1,000 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், 'சிப்காட்' நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்கும் பெரிய நிறுவனங்களுக்கு சாலை, தண்ணீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அடுத்து, முக்கிய தொழில் மையமாக கிருஷ்ணகிரி உருவெடுத்துள்ளது. தற்போது, அம்மாவட்டத்தின் ஓசூர், சூளகிரி, பர்கூர், குருபரப்பள்ளியில் ஐந்து தொழில் பூங்காக்கள் உள்ளன.


