மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அதிகரிப்பால் அடைப்பை நீக்க மாநகராட்சி ஊழியர்கள் அச்சம் :வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
வேளச்சேரி: வேளச்சேரியில் 62 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மூடுகால்வாயில், 'மேன்ஹோல்' எனும் இயந்திர நுழைவு பகுதி அமைக்காததால், தற்போது தடைபட்டுள்ள நீரோட்டத்தை சீரமைப்பதில் சிக்கல் உள்ளது. கால்வாய்க்குள் ஆறாக ஓடும் கழிவுநீரால் விஷவாயு தாக்கம் அதிகமாக இருப்பதால், ஊழியர்கள் பணி செய்ய அச்சப்படுகின்றனர்.
மழைக்காலத்தில், வேளச்சேரி ஏரியில் நிரம்பும் உபரிநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும் முன், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், சதுப்பு நிலத்திற்கு செல்லாமல் பகிங்ஹாம் கால்வாயில் உபரிநீர் விட, தரமணி 100 அடி சாலையில், 62 கோடி ரூபாயில், 18 அடி அகலம், 7 அடி ஆழத்தில் மூடுகால்வாய் கட்டப்பட்டது.
