பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவர் பலி
ஊத்துக்கோட்டை, செப். 18– உடல்நலக் குறைவு காரணமாக, பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவர், நேற்று பரிதாபமாக
உடல்நலக் குறைவு காரணமாக, பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
வெங்கல் அடுத்த பண்டிக்காவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ், 76. வயது மூப்பு காரணமாக, இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கடந்த 15ம் தேதி, மது பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.
வாந்தி எடுத்த அவரை, உறவினர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் கிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

